சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி விபத்து: 10 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்சிஜன் டேங்கர் லாரி விபத்து 10 மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

Update: 2021-07-27 06:30 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நோக்கியா தொழிற்சாலை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் ஆக்சிஜன் சிலிண்டர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான ஆக்சிஜன் சிலிண்டர் லாரியில் 11 டன் ஆக்ஸிஜன் இருந்ததால் லாரியை மீட்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது. காவல்துறை ஜேசிபி உதவியுடன் விபத்துக்குள்ளான லாரியை காலை 8 மணிக்கே பாதுகாப்பாக மீட்டு அப்புறப்படுத்தினர்.

இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இரு மார்க்கங்களிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு பல மணி நேரமாக வாகன ஓட்டிகள் அவ்விடத்தை கடக்க நேரிட்டது. விபத்துக்குள்ளான லாரியை பத்திரமாக மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இந்த போக்குவரத்து நெரிசல் உண்டாவதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News