கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டும் போதாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெலுங்கானா ஆளுனர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 35 அடி உயர முருகன் திருவுருவ சிலைக்கு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 35 அடி உயரம் கொண்ட திரு உருவச் சிலையுடன் கூடிய பாலமுருகன் திருக் கோயிலின் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
மேலும் ஆளுநர் தமிழிசை பேசுகையில், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டும் போதாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.