ஸ்ரீபெரும்புதூர்: தடுப்பூசி செலுத்த வந்தார்களா !! கொரோனாவை பரப்ப வந்தார்களா !!

ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றதால் பீதி ஏற்பட்டது.;

Update: 2021-06-04 11:00 GMT

சமூக இடைவெளியை மறந்து தடுப்பூசி போட குவிந்த தொழிற்சாலை ஊழியர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி காலை 8 மணி முதலே தொழிற்சாலை ஊழியர்கள் தங்களது தொழிற்சாலை வாகனத்தில் திருமண மண்டபத்தில் குவிந்தனர்.10 மணிக்கு  தடுப்பூசி முகாம் அலுவலர்கள் வந்தனர். ஊழியர்கள், சமூக வெளியிட இன்றி  நின்றதை கண்டும் காணாததுபோல், தடுப்பூசி பணியாளர்கள் தங்கள் பணியை தொடங்கினர்.

தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் ஊசி செலுத்திக்க கொள்ள வந்த ஊழியர்கள், கொரோனாவை பரப்பும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்தவர்கக்கு அதிர்ச்சி அளித்தது. ஊழியர்களை தவிர அங்கு ஊசி செலுத்தி கொள்ள வந்த பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி தரவில்லை. 

Tags:    

Similar News