22 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பு பறிமுதல், 4 பேர் கைது
மாங்காடு பகுதியில் ரூபாய் 22 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பை இணையத்தில் விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்
மருந்து பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் திமிங்கலத்தின் கொழுப்பினை சிலர் மாங்காடு பகுதியில் பதுக்கி ஆன்லைன் (இணையத்தின்) மூலம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய புலனாய்வு துறை மற்றும் வனஉயிர் பாதுகாப்பு பிரிவு போலீஸார்க்கு தவகல் கிடைத்துள்ளது.
இதையடுத்து திமிங்கலத்தின் கொழுப்பை வாங்கும் இடைத்தரகர்கள் போல் வேடமணிந்த மத்திய புலனாய்வு துறை மற்றும் வன உயிர் பாதுகாப்பு பிரிவு போலீஸார் மாங்காடு பகுதியில் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அந்த வீட்டில், 22 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் கொழுப்பினை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மதுரையைச் சேர்ந்த முருகன் (53), சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (30), ரஞ்சித் (36), விஜயபாஸ்கர் 56 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ 22 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கொழுப்பினை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் வனத்துறையினர், திமிகலத்தின் கொழுப்புகள் வைத்திருந்த முருகன், கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித், விசயபாஸ்கர் ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.