ரூ.70 கோடி மதிப்பில் அடையாறு கால்வாய் அகலபடுத்தும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும் இடத்தில் இருந்து அனகாபுத்தூர் பாலம் வரை நடைபெறவுள்ளது.

Update: 2022-05-26 13:00 GMT

ரூ.70 கோடி மதிப்பில் அடையாறு கால்வாய் அகலபடுத்தும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடையாறு உப்படுகை மற்றும் கொசஸ்தலையாறு உப வடிநில படுகைக்கு உட்பட்ட செம்பரம்பாக்கம், போரூர், அடையார், இராமாபுரம், சோழவரம் மற்றும் கொளத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் பெய்த கனமழையினால் கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின.

நடப்பு நிதியாண்டில் சட்டசபை கூட்டத்தொடரில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில், தனலட்சுமி நகர் சீனிவாச நகர், ஜோதி நகர், கொளுத்துவாஞ்சேரி, E.V.P நகர், வரதராஜபுரம், ராயப்பா நகர் மற்றும் முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் வடிய பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரியிலிருந்து இராமாபுரம் ஓடை வரை மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணி, செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும் இடத்திலிருந்து அனகாபுத்தூர் பாலம் வரை அடையாறு ஆற்றினை அகலப்படுத்தும் பணி, போரூர் ஏரியின் உபரி நீர் கால்வாய் மற்றும் நீரொழுங்கினை மேம்படுத்தும் பணி, தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலையில் கூடுதலாக பெட்டி வடிவிலான கல்வெட்டுகள் Push through முறை மூலம் அமைக்கும் பணி, கொளுத்துவாஞ்சேரி சாலையில் தந்தி கால்வாயிலிருந்து போரூர் ஏரி உபரி நீர் கால்வாய் வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணி ஆகிய பணிகளுக்கு ரூ.170 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும் இடத்தில் இருந்து அனகாபுத்தூர் பாலம் வரை அடையாறு ஆற்றினை ரூ.70 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணியை இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம், செயற்பொறியாளர், சேப்பாக்கம் கொசஸ்தலையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் இரா.அருள்மொழி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News