வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை மீட்டு, தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தார்சாலை அமைத்து தரக்கோரி கலெக்டரிம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் படப்பை அருகே அமைந்துள்ளது மாகாண்யம் கிராமம். இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் . இவ்ஊராட்சியை சேர்ந்த அழகூர் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைத்து தேவைகளுக்கும் படைப்பை நகரையே சார்ந்து இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் செல்ல போதிய சாலை வசதிகள் இல்லாததால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதியில் சாலை அமைக்க தடையாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வனத்துறை அனுமதி பெற மிகுந்த சிரமமாக உள்ளதால் சாலை அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ள இயலவில்லை.
இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் படைப்பை நகருக்கு செல்ல வேண்டிய தூரத்தை 4 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது மேலும் கர்ப்பிணி மற்றும் மருத்துவ சிகிச்சை பெற இதனால் காலதாமதம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க அப்பகுதி மக்களிடம் இருந்து பெற்று நிரந்தர தார்சாலை ஆக்கி தங்களது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி தர வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியின் மனு அளித்துள்ளனர்.
கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் வனத்துறையிடம் இருந்து நிலம்ம் பெற சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.