ஸ்ரீபெரும்புதூரில் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை , அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் சாரதா வயது 35 . தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்னை நோக்கி சாலையின் ஓரமாக சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் அருகே சத்யம் கிராண்ட் ஹோட்டல் முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது காஞ்சிபுரத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து சாரதாவின் இருசக்கர வாகனத்தின் பின்பக்கமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட சாரதா சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்குதரமில்லாத ஹெல்மெட்.. விபத்தில் உயிரிழந்த இளம்பெண் அனுப்பி வைத்தனர். தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் தரமற்ற ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர்பலிக்கு முக்கிய காரணமாக அமைந்து என்பதும், ஹெல்மெட் முற்றிலும் விபத்தில் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான ஹெல்மெட் பயன்படுத்தி இருந்தால் உயிர்சேதம் தவிர்த்திருக்கலாம் என பலரும் வருத்ததுடன் கூறினர். போலீஸ் பிடிக்கும் என்பதற்காக மட்டும் ஹெல்மெட் அணியாமல், நமக்கான பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தரமான ஹெல்மெட் வாங்கி அணிய வேண்டும் என்று கருது தெரிவித்தனர்.