காவல்துறை சோதனை: கஞ்சா விற்பனை செய்த 9 வாலிபர்கள் கைது
மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள் பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த பேரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மணிமங்கலம் காவல்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
அப்பொழுது கரசங்கால் ஹர்ஷா கார்டன் பின்புறம் ஒன்பது வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து தெரியவந்தது.உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்து ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.பின்னர் நடைபெற்ற விசாரணையில் கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த பேட் ரவி என்கின்ற ரவிக்குமார்(20,) புருஷோத்தமன்(22,), அருண்குமார்(18,), நந்தகுமார்(18,), சூரிய பிரதாப்(18,), ஆரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ்(18,), லோகேஷ்(18,), சாலமங்கலம் பகுதி சேர்ந்த விஜய்(18,), சிறுமாத்தூர் பகுதி சேர்ந்த ஐயப்பன்(18 ) ஆகிய 9 பேரையும் மணிமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவர்கள் ஆரப்பாக்கம் சாலமங்கலம் ஒரத்தூர் மணிமங்கலம் படப்பை கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்தவர்கள் என்பதும், இதில் ஏழு பேர் 18 வயதுடைய வாலிபர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.