தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (24.4.2022) திருப்பெரும்புதூர் ஒன்றியம், செங்காடு ஊராட்சியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், நீடித்த வளர்ச்சியை அடைய உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இயக்குநர் பிரவின் நாயர், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா-ஆர்த்தி, இ.ஆ.ப., கராட்சி மன்றத் தலைவர் செஞ்சுராணி கவாஸ்கர், ஊராட்சி மன்ற துணை தலைவர் டி. சுதாகர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்