மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் படப்பை வட்டார வளர்ச்சி அலுவலகம்

75வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள நிலையில் படப்பை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தேசியக்கொடி வண்ண விளக்குகளால் ஓளிரச் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-08-13 11:15 GMT

படப்பை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேசிய கொடியில் உள்ள மூவண்ணக் வர்ணம் போல் ஒளிரும் மின்விளக்குகள்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படப்பையில் உள்ள குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் ஏற்பாட்டில் மின் விளக்குகளால் மூவர்ண கொடி போல் அலங்கரித்துள்ளனர் .

இந்த மூவர்ன கொடிபோல் மிளிரும் மின் விளக்குகள் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது.

மூவரணங்களில் ஜொலிக்கும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் மூவரணங்களில் ஜொலிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News