ஒரகடம் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி மதிப்பு பொருட்கள் சேதம்

ஒரகடம் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதமடைந்தன.;

Update: 2022-05-20 02:00 GMT

ஒரகடம் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து.

காஞ்சிபுரம் மாவட்டம் ,  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் சிப்காட்டில் கார் நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நேஷனல் ஆட்டோ பிளாஸ்டிக் நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்நிறுவனத்தில் பராமரிப்பு பணிக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து நிறுவனத்தில் இன்று மாலை வேளையில் 15 பேர் மட்டும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றி எரிய ஆரம்பித்து மளமளவென முழுவதுமாய் எரிய ஆரம்பித்து விட்டது.

உடனே சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்துவிட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் இந்த தீயானது தொடர்ந்து 5மணி நேரத்திற்கு மேலாக எரிந்து வந்ததால் நிறுவன கட்டிடம் முழுவதும் தீயில் கருகி சாம்பலாகியது.

மேலும் ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை  அணைத்தனர். தீ விபத்தால் பல கோடி  மதிப்பிலான பொருட்கள் சேதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News