ஓரகடம் : வட மாநில குற்றவாளிகளை கண்டறிய ஆபரேஷன் சர்சிங்
ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வடமாநில குற்றவாளிகள் தங்கியுள்ளனரா என கண்டறிய 6 தனிப்படைகள் கொண்ட " ஆப்ரேஷன் சர்சிங்" எனும் பெயரில் தேடுதல் வேட்டையில் காவல்துறை இறங்கியுள்ளது.;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஒரகடம் பகுதியில் இயங்கிவந்த டாஸ்மார்க் ஊழியர் ஒருவரை மர்ம நபர்கள் கொலை செய்து மற்றொருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.
இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நடந்து வந்த பெண்ணிடம் 6 சவரன் நகையை பறித்துக் கொண்டு துப்பாக்கி காட்டி தப்பியோடி அருகில் உள்ள ஏரிக்குள் புகுந்த நபர்களை காவல்துறை ஓருவரை சுட்டு வீழ்த்தியும் , மற்றவரை கைது செய்து அவர்கள் இருந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் துப்பாக்கி கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுபோன்று ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் தங்கியுள்ளனரா மற்றும் அங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்களின் முழு விவரம் , அவர்களது அறைகளை சோதனை மேற்கொள்ளுதல் எனக் கண்டறியும் பணியினை காஞ்சி மாவட்ட காவல்துறையினர் பல மாவட்டங்களை சேர்ந்த தேடுதல் வேட்டை குழுவினரை இணைத்து ஆறு குழுக்களாக நியமித்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை எந்தவித ஒரு குற்றவாளிகளும் அல்லது அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்யப்படவில்லை என தெரியவருகிறது.