வாக்குறுதி மட்டுமே.. அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கும் எம்.எல்.ஏ.,க்கள்
Kanchipuram News in Tamil -பல்வேறு பன்னாட்டு தொழிற்சாலை பணியாளர்கள், பொதுமக்கள் சிறுநீர் கழிக்கக் கூட சுகாதார வளாகம், பேருந்து நிலையம் என ஏதும் இல்லாத அவல நிலையிலே தற்போதும் உள்ளனர்.;
சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தம் கூறப்படும் பகுதி.
Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் கோயில் பட்டு நகரம் எனவும், உத்திரமேரூர் விவசாய மாவட்டத்திற்கான பங்கையும், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நகரம் என பெயரையும், ஆலந்தூர் சென்னை மாநகரை ஒட்டிய பகுதி எனவும் விளங்குகிறது.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம் பகுதி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ளது.
விஞ்ஞான வளர்ச்சி தொழில் வளர்ச்சி என பல வகைகளில் நாடு முன்னேறி வரும் வகையில் இன்றும் இப்பகுதியில் சாலையில் கழிவு நீரும் , பேருந்து நிலையம் இல்லாமல் பயணிக்கும் பயணிகளும், அவர்களின் இயற்கை உபாதைகளின் தேவைகளை பூர்த்தி செய்யாத சுகாதார வளாகங்களும் இன்றி இன்றளவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அப்பகுதியில் உலா வந்து வருகின்றனர்.
இதன் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல தொழிற்பேட்டை சிப்காட் அமைந்துள்ளது. பல்வேறு தொழிற் சாலைகள் சுங்குவார்சத்திரம் பகுதியிலேயே அமைந்துள்ளதால் தொழிலாளர்கள் பலர் இப்பகுதியில் குடியேறி வருகின்றனர்.அதனால் இங்கு நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
இவற்றோடு சுற்றுவட்டார கிராம மக்களும் தங்களது அத்தியாவசியத் தேவைக்காக இங்கு வருகின்றனர். மேலும், சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல சுங்குவார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தையே கிராம மக்கள் பிரதானமாக நம்பியுள்ளனர்.
அதனால், இங்கு தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், பேருந்து நிறுத்தமோ , அடிப்படை வசதிகளான பொதுக்கழிப்பிடம், குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்படவில்லை.
பல கீமீ தூரம் பேருந்தில் பயணித்து வரும் பயணிக்களுக்கு பொதுக் கழிப்பிட வசதி இல்லாததால் , குறிப்பாக பெண் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர். குடிநீர் வசதியும் இல்லாததால் முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பல ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ வேட்பாளர்கள் , தான் வெற்றி பெற்றால், சுங்குவார் சத்திரம் பகுதியில் கழிப்பறை, பயணிகள் நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக பலர் கூறியும் ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை கானல் நீராகவே உள்ளது.
இது குறித்து அப்பகுதிவாசி தெரிவிக்கையில் , சுங்குவார்சத்திரம் பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்டுவ தற்காக, தொகுதி நிதியில் இருந்து 2012-13ம் ஆண்டு ரூ.7.5 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பேருந்து நிறுத்தம் அருகே, திருமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கழிப்பிடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
ஆனால், திருமங்கலம் ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பணி நிறுத்தப்பட்டது.
அதன் பின் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியை எந்த எம்எல்ஏ., எம்.பி, உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கண்டும் கொள்வதில்லை.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அவ்வப்போது தேர்தல் வரும் நிலையில் அரசியல் கட்சியினால் அளிக்கப்படும் வாக்குறுதிகள் *அப்ப சொன்னது தான்.. இப்பவும் சொல்றேன்* என தற்போது வரை வாக்குறுதிகளாகவே தொடர்கிறது.
தூய்மை இந்தியா, வீடுகள் தோறும் கழிவறை என கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுவது என்பதானாலோ இது போன்ற பொது இடங்களில் கழிவறை அவசியமில்லை என அரசு நினைக்கிறதோ ?
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2