தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்
காஞ்சிபுரத்தில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ஒருநாள் பயிற்சிமுகாம் நடைபெற்றது.;
காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ஒரு பயற்சி முகாமில் வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் நடத்திய தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ஒருநாள் பயிற்சியை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் வளாகத்தில் நடத்தியது.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நசீமுதீன் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, பாதுகாப்பு இலக்குகளை அடையவும், நேர்மறையான பாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்கவும், பணியிடத்தில் சரியான பாதுகாப்புப் பழக்கங்களின் தேவையை வலியுறுத்தியது.
தமிழ்நாடு அரசு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குனர் செந்தில் குமார் 'Role of Safety Officer' (பாதுகாப்பு அதிகாரியின் பணி) எனும் தலைப்பிலான கையேட்டை வெளியிட்டு, முதல் பிரதியை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் Chief Manufacturing Officer கோபால கிருஷ்ணனிடம் வழங்கினார்.
இளங்கோவன் (இணை இயக்குனர்), குமார் (இணை இயக்குனர்) மற்றும் சசிகுமார் (துணை இயக்குனர்) உள்ளிட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த விரிவான கையேட்டில் இடம்பெற்றுள்ள, இடர் மேலாண்மை, சட்டபூர்வ தேவைகள், சம்பவ தவிர்ப்பு மற்றும் பிறரிடையே பாதுகாப்பு கலாச்சாரத்தை கட்டமைத்தல் ஆகிய தலைப்புகள், பாதுகாப்பு அதிகாரியின் பணி மற்றும் பொறுப்புகளை விரிவாக விளக்குகின்றன. மேலும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் புதுமையான அணுகுமுறைகள் மூலம் எவ்வாறு சம்பவங்களை தவிர்க்கலாம், தொழிற்சாலைகளில் சுகாதாரத்தின் அவசியம் மற்றும் பணிச் சூழலியலின் பங்கு ஆகியவை குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்த பயிற்சியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 255 நிறுவனங்களில் இருந்து 350க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் மூத்த அதிகாரிகள் , துறை இணை இயக்குனர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.