குன்றத்தூர் கோயில் குடமுழுக்கு திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

குன்றத்தூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்குப் பணிகளினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-03-25 08:15 GMT

குன்றத்தூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணிகள் ஆய்வு மேற்கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

காஞ்சிபுரம் மாவட்டம்,  குன்றத்தூரில் அமைந்துள்ள தென் திருத்தணிகை என அழைக்கப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக ஸ்ரீ தங்க கவசத்தில் காட்சியளித்த ஸ்ரீ பால சுப்பிரமணிய சாமியை சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.அதன்பின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் திருக்கோயில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அதன்பின் குன்றத்தூரில் அமைந்துள்ள திருநாகேச்சுவரம் மற்றும் சேக்கிழார் மணிமண்டபத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டு அங்கு தேவையான குறைகளை கேட்டறிந்தார்.அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில்,

குன்றத்தூர் முருகன் கோயிலில் குறிப்பிட்ட தேதியில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா நடைபெறும். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இரண்டு மார்க்கெட் பகுதிகளை மேம்படுத்தி வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இறை சொத்து இறைவனுக்கே எனும் கோட்பாடு உடன் இந்து சமய அறநிலைத்துறை செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிக்கு கடந்த காலத்தில் ஒரு லட்சம் அளித்தது. தற்போது இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் கோயில்களில் திருப்பணி எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

திருக்கோயில்களில் உள்ள தெப்பக்குளங்கள் திருக்குளம், ஓடாத தேர், தல விருட்சம் மரம் உள்ளிட்டவைகளை பழமை மாறாத காப்பாற்றவும் இந்த அரசு செயல்பட்டு வருவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை வாடகை நிலுவையில் இருந்த நூத்தி நாற்பத்தி இரண்டு கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அனைத்து தரப்பினருக்கும் நியாயமான வாடகை விதித்து நிரந்தர வருமானம் வரும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் இந்து சமய அறநிலையத்துறை செயல் படுகிறது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஜெயராமன் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News