குன்றத்தூர் நகராட்சியில் தாக்கல் செய்த 164 வேட்பு மனுக்களும் ஏற்பு

குன்றத்தூர் நகராட்சியில், 30 வார்டுகளில் போட்டியிட அளிக்கப்பட்ட 164 மனுக்களும் பரிசீலினையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.;

Update: 2022-02-06 00:30 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - கோப்பு படம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் நகராட்சியை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது.  குன்றத்தூர் நகராட்சி உள்ள 30 வார்டு  பதவிகளுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

இநநிலையில், நேற்று காலை 10 மணி அளவில் நகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களும் முன்னிலையில வேட்பு மனுக்கள் வார்டு வாரியாக தேர்தல் அலுவலர்கள் முன்பு பரிசீலனை செய்யப்பட்டன. இதில்,  அளிக்கபட்ட 164 மனுக்களுக்கும் எவ்வித தடை கோரி  கூறாததால்  அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டது. உத்திரமேரூர் பேரூராட்சியிலும் இதேபோல் அனைத்து மனுக்களும் எவ்வித தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Tags:    

Similar News