ஸ்ரீபெரும்புதூர்ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ ராமானுஜருர் தெப்ப உற்சவம்
தொடர்ந்து நான்கு நாட்கள் மாலை 7 மணிக்கு ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீராமானுஜர் பக்தர்களுக்கு தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிப்பர்;
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவபெருமாள் ஆலயம் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் ஆதிகேசவ பெருமாள் உற்சவமும் பத்து நாட்கள் ஸ்ரீ ராமானுஜரின் அவதார உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
கடந்த மாதம் 16ஆம் தேதி ஆதி கேசவப் பெருமாளுக்கு உற்சவம் தொடங்கி பத்து நாட்கள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஸ்ரீராமானுஜரின் அவதார உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில் 2 உற்சவமும் முடிந்த நிலையில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜருக்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆதிகேசவபெருமாள் உடன் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் தெப்ப குளத்தில் எழுந்தருளி தெப்பத்தில் மூன்று முறை வலம் செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தனர்.
மேலும் ஆயிரக்கணக்கானபக்தர்கள் தெப்ப குளத்தை சுற்றி நின்று ஸ்ரீராமானுஜர், ஆதிகேசவபெருமாள் ஆகியோரை வணங்கிஅருள் ஆசி பெற்று சென்றனர்.
மேலும் இந்த தெப்ப உற்சவமானது நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மாலை 7மணியளவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.