தேர்தல் பிரசார கூட்டத்தில் வெடி, வெடிக்க தடை விதிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
தேர்தல் பிரசாரத்தின் போது வெடி, வெடிக்க தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை ஒட்டி பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சித் தலைவர்கள் வருகையை ஒட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழுந்து வருவது ஒருவித மகிழ்ச்சி என்றாலும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் கருத்தில் கொண்டு பிரச்சார கூட்டங்களில் வெடி வெடிக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
நேற்று முன்தினம் தாம்பரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசார கூட்டத்தில் வரவேற்று வெடி வெடிக்கும் போது இருவருக்கு விபத்து ஏற்பட்டு, பொதுமக்கள் அலறியடித்து கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.
இதேபோல் நேற்று ஸ்ரீபெரும்புதூரில் அரசியல் தலைவர் ஒருவரை வரவேற்க வைக்கப்பட்ட பட்டாசுகள் பேருந்து நிலைய நுழைவு வாயில் அமைக்கப்பட்ட பேனரில் தீப்பிடித்து எரிந்த நிலையில் யாருக்கும் எவ்வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இது போன்ற நிலையை தவிர்க்க தேர்தல் ஆணையம் பிரசாரக் கூட்டங்களில் பொது மக்கள் அதிகம் கூடுவதால் ஆபத்துகளை ஏற்படுத்த கூடிய வெடிகளை வெடித்து பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் அதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.