ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்புரம், மேவளூர்குப்பம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2021-03-17 12:00 GMT

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கே.பழனி போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் அதிமுக வேட்பாளர் கே.பழனி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம், மேவளூர்குப்பம், வளர்புரம், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில்  பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக சாதனைகள் கூறி வாக்குகள் சேகரித்தார்.

பின்னர், குன்றத்தூர் ஒன்றியத்திற்குடப்ட்ட படப்பை பஜார் பகுதியிலும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைசெயலாளர் ராமசந்திரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, மாநில இளைஞர் பாசறை துணைசெயலாளர் சிவகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News