பண மூட்டைகளை நம்பி தேர்தலில் களம் காண்கிறது: டிடிவி தினகரன்
சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகள், தொண்டர்களை நம்பாமல் பண மூட்டைகளையே அதிமுக நம்பி உள்ளதாக டிடிவி தினகரன் காட்டம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அக்கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன் வாக்குகள் சேகரித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மொளச்சூர் பெருமாளை ஆதரித்து பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய விடிவி தினகரன், மக்கள் நல திட்டங்களை வாக்குறுதிகளாக அழைத்து களத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், அதிமுக தலைமை நிர்வாகிகளின் தொண்டர்களையும் நம்பாமல் பண மூட்டைகளை நம்பி இந்த தேர்தலில் களம் காண்கின்றனர் என குற்றம் சாட்டினார். வலிமையான தமிழகம் உருவாக அம்மா மக்கள் முன்னேற்ற கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.