திமுகவினர் துரோகம் இழைத்து விட்டனர்- காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.;

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் வேட்பாளர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்.
காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட திமுக கூட்டணி சார்பாக காங்கிரசுக்கு திமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் செல்வமேரிஅருள்ராஜை எதிர்த்து திமுகவை சேர்ந்த திமுக நகர செயலாளர் மனைவி சாந்தி சதீஷ்குமார் அவர்கள் போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் வாக்களித்து காங்கிரஸ் கட்சியை தோற்கடித்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.