குடிநீர் திட்ட இணைப்பிற்கு கூட மக்களிடம் கமிஷன் கேட்கும் திமுக: அண்ணாமலை
குடிநிர் திட்ட இணைப்பிற்கு கூட மக்களிடம் திமுக கமிஷன் கேட்கிறது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம் பகுதியில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாஜக மாவட்ட தலைவர் பாபுவை ஆதரித்து மொளச்சூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அப்போது அவர் பேசியதாவது.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வாசலிலேயே கிடைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து தற்போது செயல்படுத்தி வருகிறது.
இதற்காக தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ரூ 3169 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளாட்சி மூலமாக செயல்படுத்தி வருகிறது. இதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவை இல்லாத நிலையில் தமிழகத்தில் ரூ2000 முதல் பத்தாயிரம் வரை திமுகவினர் கமிஷன் பெறுகின்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் எந்த ஒரு சிறப்பான திட்டத்தையும் அறிவிக்கவில்லை எனவும், அறிவித்த ஒன்றைக்கூட தற்போது வரை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் மத்திய அரசு மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை அளித்து வருவதால் பாஜகவுக்கு கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சி பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.