சேதமடைந்த இருக்கைகள்: பயணிகள் அவதி
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் சேதமடைந்து எலும்பு கூடாக உள்ளதால் பயணிகள் பேருந்திற்காக நின்றபடியே காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.;
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதி பண்ணாட்டு உள்ளிட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். இங்கு நாள்தோறும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வடமாநில உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பணிக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு இரும்பினால் இருக்கைகள் அமைக்கபட்டிருந்த நிலையில் இவை அனைத்தும் தற்போது அனைத்தும் எலும்பு கூடுகளாக காட்சியளிக்கிறது. பயணிகள் அனைவரும் நின்றுகொண்டே பேருந்திற்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வயதானோர், கர்ப்பிணிகள் என பலர் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்தையும் புதுபித்தோ அல்லது மாற்றியமைத்தால் இவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.