கோயில் சிலைகள் சேதம்: கிராம‌மக்கள் சாலை மறியல்

சங்குவார்சத்திரம் அருகே துலசாபுரம் கிராமத்தில் கோயில் சிலைகள் உடைத்தவர்களை கைது செய்ய கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-21 12:00 GMT

சாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , சுங்குவார்சத்திரம் அருகே துலசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவக்கம் கிராமத்தில் விநாயகர் கோயில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை, நவகிரக சிலைகள் மர்ம நபர்கள் உடைத்து சேதபடுத்தி உள்ளனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவிலில் பிரகாரத்தின் வெளியில் உள்ள அம்மன் சிலையின் கை பகுதி சேதப்படுத்தப்பட்ட உள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கோயில் சிலைகள் சேதபடுத்தபட்ட சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர்

எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலிசார், பொதுமக்களிடம் சிலைகளை சேதபடுத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Tags:    

Similar News