கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீரை விட்ட லாரி ஓட்டுனருக்கு நீதி மன்றம் தண்டனை விதித்தது

கிருஷ்ணா கால்வாயில் கழிவு நீரை விட்ட லாரி ஓட்டுனருக்கு அபராதம் விதித்து, பனை மரங்களை ஏரிக்கரையில் நட உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.

Update: 2021-08-29 14:15 GMT
கிருஷ்ணா கால்வாய்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ளது கிருஷ்ணா கால்வாய். இந்த கால்வாய் ஊத்துக்கோட்டையில் இருந்து நீர்வந்து,  செம்பரம்பாக்கம் ஏரிக்கு செலகிறது.

இந்த கிருஷ்ணா கால்வாயில் எந்தவித அசுத்தங்களும் செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ம் தேதி மாலை 4 மணியளவில்  செட்டி பேடு அருகே கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் லாரியிலிருந்து கழிவுநீரை இதில் விட்டுள்ளனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் தறைக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போது லாரியை சம்பவ இடத்திலேயே பிடித்து அதன் ஓட்டுநர் திருவள்ளூரை சேர்ந்த அன்பு என்பவரை கைது செய்து வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில்  நீதிபதி  ரபிக் முன்னிலையில் நடைபெற்றது. இதில்  ஓட்டுனர் அன்பு இச்செயலை செய்தது உறுதியானது அதனடிப்படையில்  இவருக்கு அபராதமாக ரூபாய் 1200 விதிக்கப்பட்டும்,  ஸ்

ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் ஏதாவது ஒரு ஏரியில் 10 பனை மர   விதைகளை நட வேண்டுமெனவும் இதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதிசெய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தெரிவிக்க உத்தரவிட்டும் நீதிபதி தண்டனை விதித்தார்.

Tags:    

Similar News