ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் 15 பேர் பதவியேற்பு

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 15 பேர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டனர்.;

Update: 2022-03-02 09:00 GMT

 ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழா நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்,  இன்று ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மன்றக் கூட்டத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

நடந்து முடிந்த தேர்தலில் திமுக சார்பில் ஆறு நபர்களும்,  அதிமுக சார்பில் மூன்று நபர்களும்,  சுயேச்சையாக நான்கு நபர்களும் , காங்கிரஸ் மற்றும் பாமக சார்பாக தலா ஒருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் அனைவருக்கும் பதவி ஏற்றனர். 4ம் தேதி  பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்  உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News