தமிழகத்தில் காெரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் ஒரகடம் எழிச்சூர் பகுதியில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையம் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் காெரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், அதன் தொடர்ச்சியாக, குன்றத்தூர் தாலுக்கா , ஒரகடம் எழிச்சூரில் அமைந்துள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையம் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பராமரிப்பு மையத்தில் அமைந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளான படுக்கை அறைகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் மகேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் அனைத்து வசதிகளும் சிறப்பாக அமைக்கபட்டு சிறப்பு கவனம் கொள்ளப்படும் என தெரிவித்தார்.