கொரோனா பேரிடர் நிதி ரூ 15 ஆயிரம் வழங்கக் கோரி, படப்பை தூய்மை காவலர்கள் மனு

படப்பை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர் 23 பேருக்கு, கொரோனா சிறப்பு ஊக்கத் தொகை ரூபாய் 15,000 வழங்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-09-06 10:00 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த படப்பை ஊராட்சி தூய்மை காவலர்கள்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் போது சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் , படப்பை ஊராட்சியில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் 23 தூய்மை காவலர்களுக்கு தற்போதுதான் சம்பள உயர்வு ரூ3600 அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரண்டாவது அலையின் போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது  தூய்மை பணிகளை படப்பை முழுவதும் பணியாற்றிய தங்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு தொகையான ரூபாய் 15,000 அளிக்கப்படவில்லை என கூறி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் தூய்மை காவலர்கள் மனு அளித்தனர்.

இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags:    

Similar News