ஊரக வளர்ச்சிப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு

காஞ்சிபுரம் அருகே பேவர் பிளாக் சாலை , நவீன எரிவாயு தகன மேடை , நமக்கு நாமே திட்ட பணிகளை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.;

Update: 2022-03-23 11:30 GMT

எரிவாயு தகன  மேடை அமைக்கும் பணியை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , பேரூராட்சி நிர்வாகம் சார்பில்  திருப்பெரும்புதூர் சிறப்புநிலை பேரூராட்சியில் 2021-2022 ஆம் ஆண்டு நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி  தலைமையில் ஆய்வுப்பயணம் மேற்கொண்டு திருப்பெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டமும் நடைபெற்றது.

இவ் ஆய்வு பயணத்தின் போது கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ரூ.70.80 இலட்சம் மதிப்பீட்டில் 0.914 கி மீ நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும், திருமங்கையாழ்வார்புரம் குளக்கரை மயான பகுதியில் ரூ.149.50 இலட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.

இதேபோல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.19.30 இலட்சம் மதிப்பீட்டில் 0.255 கி.மீ நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செம்பரம்பாக்கம்-திருப்பெரும்புதூர் குடிநீர் திட்ட பணிகளையும், செம்பரம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளையும்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் ரவி மற்றும் நெடுஞ்சாலை துறை, குடிநீர் வழங்கல் துறை பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News