சுங்குவார்சத்திரம் : அங்கன்வாடி ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்

செல்வழிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் இருந்த மூன்று குழந்தைகள் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்னையை குடித்தனர்;

Update: 2022-09-09 16:15 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் செல்வழிமங்கலம் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அங்கன்வாடி மையத்திற்கு வந்த ஜம்போடை தெருவை சேர்ந்த வம்சிகா(2), யோகேஷ்(3), பிரியதர்ஷினி(2) ஆகிய மூவரும் அங்கன்வாடி மையத்தில் குளிர்பான கேனில் இருந்த மண்ணென்னையை குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளனர்.

இதில் மூன்று சிறுவர்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் ,இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று சிறுவர்களும் உடனடியாக சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. இந்த நிலையில் குழந்தைகளை முறையாக பராமரிக்காத செல்வழிமங்கலம் அங்கன்வாடி மைய ஊழியர் ஷோபா மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் குழந்தைகள் வளர்ச்சித்துறை அதிகாரி பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags:    

Similar News