ஸ்ரீபெரும்புதூர் அருகே நெஞ்சை உலுக்கும் சம்பவம்: கொதிக்கும் எண்ணெயில் விழுந்து குழந்தை மரணம்..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் இதயத்தை உலுக்கிப் போட்டுள்ளது.;
கொ.திக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்ததில் படுகாயமடைந்து மரணத்தை தழுவி உதிர்ந்து போன ஒன்றரை வயது பிஞ்சு மலர் பவிஸ்கா.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன், ஷாலினி தம்பதியினர். இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளாள். அப்போது பலகாரம் சுட்டு விட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் குழந்தை பவிஸ்கா தவறி விழுந்துள்ளார்.
இதில் பவித்ராவுக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து துடிதுடித்துப் போன பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர்கள், உடனடியாக சுதாரித்துக் கொண்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை பவிஸ்காவை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் நேரடி கண்காணிப்பில் இருந்த குழந்தை பவிஸ்கா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அலட்சியம் காரணமாக கொதிக்கும் எண்ணெயில் விழுந்து ஒன்றரை வயது பிஞ்சு குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடம் பெரும் சோகத்தையும், இதயத்தை உலுக்கிப் போட்டுள்ளது. குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்னும் படிப்பினையை காட்டுகிறது. சமீபத்தில் உறவினர்கள் அலட்சியத்தால் நான்காவது மாடியில் இருந்து நான்கு வயது சிறுமி கோபிகா மரணம் அடைந்த சம்பவம் ஏற்படுத்திய வடுவும், வலியும் மறைவதற்குள் மற்றொரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.