குட்கா விற்ற 52 கடைகள் மீது வழக்கு பதிவு, 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 52 கடைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-07-25 15:30 GMT

பைல் படம்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதார மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா, சுப்பிரமணியம் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்று 52 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.

மேலும் இவ்வாறு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News