ஸ்ரீபெரும்புதூரில் பான் மசாலா பொருட்கள் விற்பனை 122 பேர் மீது வழக்கு

ஸ்ரீபெரும்புதூரில் பான் மசாலா பொருட்களை விற்பனை செய்ததாக 122 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ 1.28 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-07-29 05:00 GMT

பைல் படம்

கொடிய நோயான கேன்சரை முற்றிலும் ஒழிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக ‌‌‌‌‌தடைசெய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகளில் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் திடீர் சோதனை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர் .

கடந்த 4 நாட்களாக நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூபாய் ஓரு லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து இது தொடர்பாக 122 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பது மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். எனவும் , நோயற்ற வாழ்வு வாழ அனைவரும் ஒன்றிணைந்து இதனை தவிர்ப்போம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News