ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலியானார்.;
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்தவர் முருகையன்(55). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று மதியம் சவாரிக்காக கிளாய் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் வருவதற்காக ஆட்டோவில் கிளாய் - அப்பாய்கண்டிகை சாலையில் வந்துக்கொண்டிருந்தார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த முருகையனை அவ்வழியாக சென்றபொதுமக்கள் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன்இன்றி முருகையன் பலியானார். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.