மாங்காடு நகராட்சி : அதிமுக 10 இடங்களில் டெபாசிட் தொகை இழந்தது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாங்காடு பேரூராட்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 10 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்தனர்;

Update: 2022-02-23 14:45 GMT

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாங்காடு நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் அமைந்துள்ளது.

இதில் போட்டியிட பல்வேறு கட்சியினர் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்த இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்று மாங்காடு நகராட்சியை கைப்பற்றினர். 

இதில் 4,5,7,8,9,11,13,18,20,26 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 10 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் டெபாசிட் தொகையை இழந்து தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News