ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி: 7 இடங்களில் டெபாசிட் இழந்த அதிமுக.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 7 இடங்களில் டெபாசிட் தொகை இழந்தனர்;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 81 பேர் போட்டியிட்டனர். இதில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட்ட அதிமுக வினர் 7 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி போட்டியிட்ட 81 நபரில் 48 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இதில் அமமுக , தேமுதிக, நாம் தமிழர்,பாமக வேட்பாளர்களும் அடங்குவர்
பிரதான கட்சியான அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் எழுந்துள்ளது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.