இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கட்டிட தொழிலாளர்கள் இருவர் பணி நிமித்தமாக ஓரகடம் பகுதியில் இருந்து வண்டலூர் நோக்கி சென்றபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

Update: 2022-08-28 01:15 GMT

விபத்து ஏற்படுத்திய கனரக வாகனம்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே சாலமங்கலம் நோக்கி இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலமங்கலம் கூட்டு சாலையின் வளைவில் திரும்பிய போது,  அப்போது ஒரகடதில் இருந்து படப்பை நோக்கி வந்த டாராஸ் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இரண்டு பேரும் லாரி சக்கரத்தில் சிக்கி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மணிமங்கலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் குமார் என்பதும் இவர்கள் இருவரும் கட்டிட பணிகள் செய்து வருவதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்ப்படுதிவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News