மாற்று கட்சியினர் 1500 பேர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

ஸ்ரீபெரும்புதூரில் மாற்று கட்சியை சேர்ந்த 1500 பேர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Update: 2021-07-31 16:45 GMT

ஸ்ரீபெரும்புதூரில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சர் அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலை செயலாளர் மு.வேலு தலைமையில் அக்கட்சியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோரும்,

கொளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த முனுசாமி தலைமையில் அக்கட்சியினர் சுமார் 500 பேரும்,

வெங்காடு ஊராட்சிமன்ற முன்னாள் துணைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் தேமுதிக வை சேர்ந்த சுமார் 200 பேரும், இருங்காட்டுக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகோபால் தலைமையில் அதிமுகவினர் 100 பேரும்,

பென்னலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.சி.பாபு தலைமையில் அக்கட்சியினர் சுமார் 150 பேர்,

பென்னலூர் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த கோபால் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 100 நபர்கள் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1500 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமைச்சர் தா.மோ, அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இனணந்தனர். இந்திகழ்ச்சிக்கு  ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார்,

வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணை அமைப்பாளர் குன்னம் முருகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  திமுகவில் இணைந்த மாற்று கட்சியினரை சால்வை அணிவித்து வரவேற்று சிறப்புரையாற்றினார்.

இதில் திருப்போரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன், திமுக நிர்வாகிகள் செந்தில்தேவராஜ், வளர்புரம் ஜார்த், பொடவூர் ரவி, வெள்ளாரை ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News