காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலராக திருவளர்செல்வி நியமனம்
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த ஆர்.திருவளர்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்;
ஆர். திருவளர்ச்செல்வி
தமிழக பள்ளிக்கல்வித்தறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த எஸ்.அருள்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனர் பதவியில் இருந்த ஆர். திருவளர்ச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதேபோல், 10 முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிந்தவர்கள் இடமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகவரவுள்ள ஆர்.திருவளர்ச்செல்வி ஏற்கனவே ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.