காஞ்சிபுரம் மாவட்டம் : இரு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டத்தில் 3 ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றியங்கலிலும் வாக்குப்பதிவு நடைபெறும்

Update: 2021-09-13 14:30 GMT

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதிகளை இன்று மாலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி  பதினைந்தாம் தேதி முதல் வேட்பு மனுக்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும், அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி அன்று காஞ்சிபுரம்,  உத்திரமேரூர்,  வாலாஜாபாத் ஆகிய மூன்று ஒன்றியங்களில் நடைபெறும்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு வாக்குப்பதிவுகளுக்கும் இருநாட்கள் கால அவகாசம் உள்ளதால் காவல்துறை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் , தேர்தல் அலுவலர்கள் தொய்வின்றி பணிகளை செய்யவும் ஏதுவாக இருக்கும் என தெரியவருகிறது.

Tags:    

Similar News