அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்
ஆசிரியர் தினத்தை ஒட்டி ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி மகிழ்வித்த மாணவிகள்;
காஞ்சிபுரம் அரசு பள்ளி மாணவிகள் பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவங்கள் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழாவை ஆசிரியர் தினமாக கொண்டாடி வரும் நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஆற்காடு நாராயணசாமி பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை மாணவர்கள் கைத்தட்டி , வாழ்த்துக்கள் கூறியும் வரவேற்றனர். இதனை தொடர்ந்து நடத்த இறைவணக்க கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் அமர செய்து அவர்களுக்கு இனிப்பு மற்றும் சால்வைகள் அணிவித்து ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியுடன் கைத்தட்டி மாணவிகள் மகிழ்ந்தனர்.
மேலும், ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசைப்பட்டதும் அவர்களுடன் குழு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஆசிரியர் தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் வகுப்பறை ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பலூன் மற்றும் சாக்லேட் பேனா உள்ளிட்ட வாழ்த்து கடிதங்களையும் அளித்து திக்கு முக்காட செய்தனர்.