சிறந்த மாணவரை உருவாக்குவது பற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பேச்சு

சிறந்த மாணவரை உருவாக்குவது பற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுடலை கண்ணன் பேசினார்.;

Update: 2022-06-17 06:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட லக்ஷ்மி குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளியை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுடலைகண்ணன் மற்றும் காஞ்சி நகர துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஸ்ரீ லக்ஷ்மி குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளி துவக்க விழா பள்ளி முதல்வர் காயத்திரி அன்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.

பள்ளி நிறுவனர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,  முன்னாள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சுடலைகண்ணன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் ஆர்.குமரகுரு நாதன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கல்வியாண்டின் வகுப்புகளை துவக்கி வைத்தனர்.

இதில் பேசிய முன்னாள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுடலைக்கண்ணன் ,  சிறந்த மாணவனை  உருவாக்க  சிறந்த ஆசிரியர்பணி , அதனை தொடர்ந்து பெற்றோர்கள் கண்காணிப்பு இவை இரண்டையும் ஒருங்கிணைக்கும் பள்ளி நிர்வாகம் ஆகியவைகள் சிறந்த வருங்கால மனிதனாகக்கும் என தெரிவித்தார். விழாவில் பெற்றோர்கள் , மாணவர்கள் , நகர பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News