தேர்தல் பிரச்சாரத்திற்கு முன் காஞ்சி காமாட்சியை தரிசித்த ஓபிஎஸ்
அதிமுக சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை துவக்கும் முன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் செய்த ஓபிஎஸ்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வாபஸ் என அனைத்து நடைமுறைகளும் முடிவுற்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காஞ்சிபுரத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
காஞ்சிபுரம் வந்த அவர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். 20 நிமிடங்களுக்கு மேலாக காஞ்சி காமாட்சி அம்மன் சன்னிதானத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வி.சோமசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் கணேசன், தூசி மோகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.ஆர்.சத்தியா, உள்ளிட்டோரும் உடன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.