காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்பு
காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ. எழிலரசன் பங்கேற்றார்.;
காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் மாகலட்சுமியுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் தலைமையில் நடைபெற்றது.
நாளை மாமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டார்.
அதில் மாமன்ற உறுப்பினர்கள் மன்ற கூட்டத்தில் செயல்படும் விதங்கள் மற்றும் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைக்கும் முறை ஆகியவை குறித்து ஆலோசனைகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வழங்கினார்.
மேலும் மக்களின் கோரிக்கைகளை எவ்வாறு மன்றத்தில் அளிப்பது , வார்டு வளர்ச்சிப் பணிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் வி.சி.க. மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகர தி.மு.க. செயலாளர் சண்பிராண்ட் ஆறுமுகம் உள்ளிட்ட நகர தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.