காஞ்சிபுரத்தில் கூட்டுறவு பயிற்சி மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் துவக்கம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கூட்டுறவு துறை சார்பில் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.;
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பு தொடக்க விழா பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் முழுநேர பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் அண்மையில் வழங்கப்பட்டு மாணவ , மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பயிற்சி வகுப்பு தொடக்க விழா அந்நிறுவன கூட்ட அரங்கில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் கே.மணி,பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர் மு.உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சு.உமாபதி அனைவரையும் வரவேற்று பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மு.முருகன் கலந்து கொண்டு முழுநேர பயிற்சி வகுப்பின் பயன்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.
கூட்டுறவுத் துறை பயிற்சிகள் பெறுவதன் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர தனியார் வங்கிகள் உள்ளிட்டு விதிகளை பணிபுரிய அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் கூட்டுறவு வங்கிகளை நம்பி அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வரும் நிலையில் அவர்களுடைய உறவு மற்றும் உங்களின் செயல்பாடுகள் அவர்களுக்கு திருப்தி அளிக்கும் நிலையில் உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். நிறைவாக நிறுவனத்தின் விரிவுரையாளர் ரா.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
தொடக்க விழாவில் பயிற்சியில் புதியதாக இணைந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், விரிவுரையாளர்கள் உட்பட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.