மின் உயர்வை கண்டித்து காஞ்சிபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2024-07-23 06:30 GMT

மின் கட்டண உயர்வை கண்டித்து விளக்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு,நியாய விலை கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வழங்காத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளரும் ,  முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட ஒன்றிய பேரூர் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் வாக்களித்த மக்களுக்கு மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் ஏப்ரல் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் பாமாயில் பருப்பு வகைகளை வழங்காமல் மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.


அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழகங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு பரிசாக மூன்றாவது முறையாக மின்சார கட்டண உயர்த்தியதை கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் பாமாயில் பருப்பு வகைகளை வழங்காமல் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசை கண்டித்து, கைகளில் பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் கே பழனி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எஸ் எஸ் ஆர் சத்யா, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி ஆர் மணிவண்ணன் ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் டி ஜீவானந்தம் களக்காட்டூர் ராஜு, அக்ரி நாகராஜன் அத்திவாக்கம் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News