உத்திரமேரூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது
உத்திரமேரூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளது.
இதில் திமுக தனித்து 18 இடங்களையும் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது இதன்மூலம் திமுக கூட்டணி 19 இடங்களை கைப்பற்றியது. அதிமுக 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை மட்டுமே கைப்பற்றியது
1வது வார்டு ருத்ர கோட்டி, இரண்டாவது வார்டு திருமலை, 3வது வார்டு அண்ணாதுரை, ஆறாவது வார்டு வீரம்மாள், ஏழாவது வார்டு சுகுணா, ஒன்பதாவது வார்டு ஹேமலதா, 10-ஆவது வார்டு கலைச்செல்வி, 11வது வார்டு பானுமதி, 12வது வார்டு ஞானசேகரன், 13வது வார்டு அன்புராஜ், 15வது வார்டு பவுன், 16வது வார்டு துரை வேலு,
17வது வார்டு சுப்பிரமணி, 18-வது வார்டு சந்திரா, 19வது வார்டு கல்யாணசுந்தரம் 20 ஆவது வார்டு நதியா, 21வது வார்டு வசந்தி, 22வது வார்டு சேகர் ஆகிய திமுகவைச் சேர்ந்த 18 பேர் வெற்றி பெற்ற வெற்றி பெற்றனர்
திமுக கூட்டணியில் 14 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தீபா வெற்றி பெற்றார் அதிமுக போட்டியிட்ட 22 இடங்களில் 4வது வார்டு ராமச்சந்திரன், 5-ஆவது வார்டு ரேவதி, 8வது வார்டு மகேஸ்வரி ஆகிய மூன்று பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் உத்திரமேரூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக அதிக பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.