காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

Update: 2021-10-12 22:00 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினெட்டு ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது இதில் போட்டியிட்ட 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிகாலை 3 மணி வரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 வார்டுகளில் 15 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 11 இடங்களை திமுக கைப்பற்றியது. அதிமுக இரண்டு இடங்களையும் அதிமுக கூட்டணியில் பிஜேபி ஒரு இடத்தையும் சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தையும் பிடித்தனர் மீதமுள்ள 3 ஒன்றிய வார்டு கவுன்சிலர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

1வது வார்டு மோகனா இளஞ்செழியன், இரண்டாவது வார்டு வளர்மதி, நாலாவது வார்டு பாலாஜி,5வது வார்டு ஆதிலட்சுமி, 6வது வார்டு ராம்பிரசாத், 7வது வார்டு ஹேமலதா, 9-வது வால்ட் மலர்கொடி, 10வது வார்டு கோடீஸ்வரி, 12வது வார்டு ரேகா, 13வது வார்டு தேவபாலன், 14வது வார்டு அன்பழகன் ஆகியோர் திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர் .

8வது வார்டு வேட்பாளர் விமல்ராஜ், 15வது வார்டு வேட்பாளர் பேபி சசிகலா ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். 3வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் வெற்றி பெற்றுள்ளார்

Tags:    

Similar News