காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 512 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்தனர். 4,428 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.