காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 290 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.